Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

தேர்தல் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் அணிவகுப்பு… ராணுவ படையினர் பங்கேற்பு… மயிலாடுதுறை போலீஸ் சூப்பிரண்டு உத்தரவு..!!

மயிலாடுதுறையில் தேர்தல் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் விதமாக துணை ராணுவ படையினர் மற்றும் காவல்துறையினர் நேற்று முன்தினம் அணிவகுப்பு மேற்கொண்டனர்.

தமிழ்நாட்டில் ஏப்ரல் 6-ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது.இதனால் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருந்து வருகிறது. மேலும் தேர்தலில் வாக்காளர்கள் பயமின்றி வாக்களிக்கவும், அவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் விதமாக காவல்துறையினர் பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி மயிலாடுதுறை மாவட்டத்தில் காவல்துறையினர் மற்றும் துணை இராணுவப் படையினர், போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா உத்தரவின் பேரில் அணிவகுப்பு மேற்கொண்டனர்.

இந்த அணிவகுப்பை உதவி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் மகாதேவன், அறிவழகன் மற்றும் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிங்காரவேலு ஆகியோர் வழி நடத்தினர். இந்த அணிவகுப்பானது மாப்படுகை பகுதியில் உள்ள ரயில்வே கேட் அருகில் இருந்து மயிலாடுதுறை துணை போலீஸ் சூப்பிரண்டு அண்ணாதுரை தலைமையில் தொடங்கி வைக்கப்பட்டது. இந்த அணிவகுப்பில் அதிரடிப்படை காவல்துறையினர் மற்றும் 60 துணை ராணுவ படையினர் உட்பட 110 பேர் பங்கேற்றுள்ளனர்.

Categories

Tech |