Categories
தேசிய செய்திகள்

தீவிரவாதிகளுடன் மோதல் ” ராணுவ வீரகள் மீது துப்பாக்கிச்சூடு” ஜம்முவில் பரபரப்பு ….!!

ஜம்முவில் பயங்கவாதிகளுக்கும் , பாதுகாப்பு படையினருக்கும் இடையே நடந்த மோதலில் 2 பாதுகாப்புபடை வீரர்கள் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ஜம்முவில் தொடர்ந்து பயங்கரவாதிகளுக்கும் , ராணுவ வீரர்களுக்கு தொடர்ந்து சண்டை ஏற்பட்டுக் கொண்டு இருக்கின்றது. கடந்த ஜூலை 31_ஆம் தேதி அங்குள்ள கன்சல்வான் கிராமத்தில்  தீவிரவாதிகளுடன் ஏற்பட்ட மோதலில்  பாதுகாப்பு படையினரால் 2 பாயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

ஜம்மு-காஷ்மீரில் துப்பாக்கிச்சூடு : இரண்டு ராணுவ வீரர்கள் காயம்

இந்நிலையில் ஜம்மு-காஷ்மீரின் சோபியன் மாவட்டத்திலுள்ள பந்தோஷன் கிராமத்தில் இன்று அதிகாலை பயங்கரவாதிகளுக்கும் , பாதுகாப்பு படையினருக்கும் மோதல் நடந்தது. தொடர்ந்து நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் இரண்டு ராணுவ வீரர்கள் காயமடைந்தனர். காயமடைந்த  ராணுவ வீரர்கள்  மருத்துவமனையில் அனுமதிக்கப்படு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Categories

Tech |