Categories
வேலைவாய்ப்பு

ராணுவத்தில் சேர்ந்திட ஆசையா… 191 பணியிடங்கள் அறிவிப்பு ..! ரூ 250000 வரை சம்பளம் … கடைசிநாள்: பிப்ரவரி 20 ..!!

ராணுவத்தில் தொழில்நுட்ப பிரிவில் பட்டப்படிப்பு படித்த ஆண்- பெண் இருபாலரும் சேர்க்கப்படுகிறார்கள்.

ராணுவத்தில் பல்வேறு பயிற்சி சேர்க்கையின் படி தகுதியான இளைஞர்கள் பணியில் சேர்க்கப்பட்டு வருகிறார்கள். தற்போது தொழில்நுட்ப பிரிவில் 55-வது சேர்க்கையின்படி ஆண்களும், 26-வது சேர்க்கையின்படி பெண்களும் சேர்க்கப் படுகிறார்கள்.

எஸ்.எஸ்.சி. (டெக்) கோர்ஸ் காமென்சிங் அக்டோபர் 2020 எனும் இந்த பயிற்சி சேர்க்கையில் மொத்தம் 191 பேர் சேர்க்கப்படுகிறார்கள். இதில் பெண்களுக்கு 16 இடங்கள் உள்ளன. ஆண்களுக்கு 175 இடங்கள் உள்ளன. ஒவ்வொரு பாடப்பிரிவிலும் உள்ள பணியிட விவரங்களை முழுமையான விளம்பர அறிவிப்பில் பார்க்கலாம்…

வயது வரம்பு :

விண்ணப்பதாரர்கள் 1-10-2020-ந் தேதியில் 20 வயது பூர்த்தி அடைந்தவர்களாகவும், 27 வயதுக்கு உட்பட்டவர்களாகவும் இருக்க வேண்டும். விதவைகள் 35 வயதுக்கு உட்பட்டவர்களாக இருந்தாலும் விண்ணப்பிக்கலாம்.

கல்வித்தகுதி :

பி.இ., பி.டெக் பட்டப்படிப்பில் ஏதேனும் ஒரு பிரிவில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். இறுதியாண்டு படித்துக் கொண்டிருப்பவர்களும் விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள். விண்ணப்பதாரர்கள் ஆண்-பெண் இருபாலரும் திருமணம் ஆகாதவராக இருக்க வேண்டும். விதவைப் பெண்களுக்கு ஒன்றிரண்டு இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

தேர்வு செய்யும் முறை :

எஸ்.எஸ்.பி. அமைப்பின் மூலம் ஸ்டேஜ்-1, ஸ்டேஜ்-2 என இரு நிலை தேர்வுகளுக்கு உட்படுத்தப்பட்டு தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். படங்களை புரிந்து கொள்ளுதல், நுண்ணறிவுத் திறன், உடல் திறன் தேர்வு, கலந்துரையாடல், நேர்காணல், உளவியல் தேர்வு உள்ளிட்ட தேர்வுகள் இதில் அடங்கும். அனைத்திலும் தேர்ச்சி பெறுபவர்கள் பயிற்சியில் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள்.

பயிற்சியிலும் தேர்ச்சி பெறுபவர்கள் லெப்டினன்ட் தரத்திலான அதிகாரி பணியில் சேரலாம். மேலும் 18 நிலைகளில் பதவி உயர்வு பெறுவதுடன், 2½ லட்சம் ரூபாய் வரை சம்பள உயர்வும் பெறலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். 20-2-2020-ந் தேதி விண்ணப்பிக்க கடைசி நாளாகும்.

இது பற்றிய விரிவான விவரங்களை www.joinindianarmy.nic.in என்ற இணையதள பக்கத்தில் பார்க்கலாம்.

Categories

Tech |