சன் டிவி ஒளிபரப்பாகும் மகராசி சீரியலில் நடித்து வருபவர் திவ்யா. இவருக்கு திருமணம் ஆகி 6 வயதில் மகள் இருக்கும் நிலையில், செல்லமா தொடரில் நடித்து வரும் அர்னவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களின் திருமண வாழ்க்கையில் பல பிரச்சனைகள் நடக்க ஆர்னவ் கைது செய்யப்பட்டு 15 நாட்கள் சிறையில் அடைக்கப்பட்டார். சிறையில் இருந்து வெளியே வரும் போது அர்னவ் திருந்தி வந்தால் ஏற்றுக் கொள்வேன் என திவ்யா கூறியிருந்தார்.
இந்நிலையில் தற்போது கர்ப்பிணியாக இருக்கும் நடிகை திவ்யாவை கணவர் அர்னவ் தனியாக தவிக்க விட்ட நிலையில், சக நடிகர்கள் வீட்டில் வைத்து திவ்யாவுக்கு வளைகாப்பு நடத்தியுள்ளனர். இது தொடர்பான வீடியோ தற்போது வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மேலும் இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் பலரும் திவ்யாவுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருவதோடு, கூடிய விரைவில் அர்னவ் மனம் திருந்தி உங்களுடன் சேர்ந்து வாழ வேண்டும் எனவும் கூறி வருகிறார்கள்.
View this post on Instagram