பிரித்தானிய நாட்டில் வெறும் வயிற்றில் மது அருந்தியதால் 27 வயது இளம்பெண் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிரித்தானியாவில் உள்ள Brighton பகுதியை சேர்ந்த 27 வயதுடைய Alice Burton Bradford என்ற பெண் சென்ற மாதம் அவரது தோட்டத்தில் உயிரிழந்து கிடந்துள்ளார். இறப்பதற்கு முன்னதாக அவர் வெறும் வயிற்றில் மது குடித்ததால் சிக்கலான ஆல்கஹால் கெட்டோ அசிடோசிஸால் மிகவும் அவதிப்பட்டு இறந்துள்ளார். மேலும் உயிரிழந்த பெண் குடிகாரர் இல்லை. அவர் எப்போதும் நல்ல உடல் ஆரோக்கியத்துடனும், நண்பர்களுடன் ஓடுவது மற்றும் சைக்கிள் ஓட்டுவது போன்ற செயல்களையும் செய்து கொண்டிருப்பார். இச்சம்பவம் பற்றி அப்பெண்ணின் 8 ஆண்டு கால நண்பர் Aaron Mulvey கூறும்போது, இந்நிகழ்வு அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிகழ்வை எவரும் எதிர்பார்க்கவில்லை.
அவள் இறப்பதற்கு மூன்று வாரத்திற்கு முன்னர் நெடுந்தொலைவில் இருக்கக்கூடிய ஹலே என்ற பகுதிக்கு சைக்கிளில் சென்றுள்ளார். இவர் இறக்கும் வரையில் ஆல்கஹால் கெட்டோஅசிடோஸிஸ் குறித்து நான் அறிந்ததே இல்லை எனவும் சம்பவத்தின் வார இறுதியில் அவர் எவ்வளவு மது அருந்தி இருந்தார் என்று யாருக்கும் தெரியாது எனவும் கூறியுள்ளார். அச்சமயத்தில் அப்பெண் ஒரு குடிகாரர் இல்லை எனவும் குறிப்பிட்டுள்ளார். Alice Burton போதுமான அளவு உணவு சாப்பிடாமல் வெறும் வயிற்றில் மது அருந்தியதால் அவரது வயிற்றில் ஒரு அமிலத்தை தூண்டியுள்ளது. பின்னர் அவர் வெளியே தன் தோட்டத்திற்கு சென்று அங்கு உயிரிழந்துள்ளார்.
அவள் குறைவான வயதிலையே எங்களைப் பிரிந்து சென்றது அனைவருக்கும் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது என கூறி இருக்கின்றார். இச்சம்பவத்தின் மூலம் நாம் அறிய வேண்டியது என்னவென்றால், நல்ல உடல்நிலையுடன் தான் இருக்கின்றோம் என கருதி நினைக்கும் நேரத்தில் எல்லாம் மது அருந்துவது ஆபத்தை உண்டாக்கும். இந்நிகழ்வு மது பிரியர்கள் அனைவருக்கும் ஒரு எச்சரிக்கையாகவே கருதப்படுகிறது.