வட இந்தியாவில் பெரும்பாலும் திருமண நிகழ்ச்சியின்போது ஃபெர்ரா என்னும் சடங்கு செய்யப்படுவது உண்டு. இந்த சடங்கின் போது மணமக்கள் யாக குண்டத்தை சுற்றி வர வேண்டும். அப்போது ஐயர் மந்திரங்களை ஓதுவார். இது ஒரு மரபாக கருதப்படுகிறது. அப்படி திருமணம் ஒன்றின் போது மணமக்கள் அந்த சடங்கின்போது யாக குண்டத்தை சுற்றி வருகையில் நடனமாடிய வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதை பிர்லா ப்ரிசியந்த் டெக்னாலஜீஸ் நிறுவனத்தின் தலைவர் பதிவிட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் இந்திய மரபுகளை இந்த தம்பதியினர் அவமதித்ததாக குறிப்பிட்டுள்ளார். இந்த சடங்கானது இவர்களின் திருமணத்தின் முக்கிய அம்சமாகும். ஆனால் இந்த தம்பதியர்கள் இந்த சடங்கை மிகவும் வேடிக்கையாக செய்துள்ளனர் என்று குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்து நெட்டிசன்கள் ஒரு சிலர் இது திருமணமா? அல்லது வேறு ஏதாவதா? என்றும், கலாச்சாரத்தை மதிக்காமல் பாலிவுட் சினிமாவில் திருமணம் செய்வதுபோல செய்கிறார்கள்? என்றும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
https://twitter.com/i/status/1366771588910092288