Categories
தேசிய செய்திகள்

மலேசியா, துபாயில் சிக்கியுள்ள தமிழர்களை விமானங்கள் மூலம் அழைத்து வர ஏற்பாடு: மத்திய அரசு

மலேசியா, துபாய் உள்ளிட்ட நாடுகளில் சிக்கியுள்ள தமிழர்களை விமானங்கள் மூலம் அழைத்துவர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. துபாய் மற்றும் மலேசியாவில் இருந்து தலா 2 விமானங்களில் தமிழர்களை சென்னை மற்றும் திருச்சிக்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

முன்னதாக, வெளிநாடுகளில் தங்கியிருக்கும் தமிழர்கள் நாடு திரும்ப பிரத்யேக இணையதள முகவரியை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. http://nonresidenttamil.org என்ற இணைய தளத்தில் பதிவு செய்ய அறிவுறுத்தியுள்ளது. இதையடுத்து, இந்தியா திரும்ப வெளிநாடுகளில் வசிக்கும் லட்சக்கணக்கான மக்கள் பதிவு செய்துள்ளனர். அதில், தமிழகத்தை சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் பல்வேறு நாடுகளில் இருந்து தமிழகம் திரும்ப வேண்டும் என விருப்பம் தெரிவித்துள்ளனர்.

எனவே, முதற்கட்டமாக பல்வேறு நாடுகளில் சிக்கியுள்ள இந்தியர்கள் தாயகம் அழைத்து வரப்படும் போது, தமிழகத்திற்கு மட்டும் 4 விமான சேவைகள் இயக்கப்படும் எனவும், துபையில் இருந்து 2 விமான சேவைகள் சென்னை வந்து சேரும் எனவும், மலேசியாவின் கோலாலம்பூரில் இருந்து 2 விமானங்கள் சென்னை மற்றும் திருச்சி வந்து சேரும் என்றும் மத்திய விமானத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

இதற்கான முழு ஏற்பாடுகளை செய்யும் படி, ஏர்-இந்தியா நிறுவனத்திற்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது. முதல்கட்டமாக 64 விமான சேவைகள் மூலம், சுமார் 15,000 இந்தியர்கள் அழைத்து வர திட்டமிடப்பட்டுள்ளது. இதுதவிர 3 கப்பல்கள் மூலம் மாலத்தீவு, துபாய் போன்ற இண்டங்களில் இருந்தும் இந்தியர்கள் தாய்நாட்டிற்கு அழைத்து வரப்படுவார்கள் என தெரிவிக்கப்ட்டுள்ளது.

வெளிநாடு வாழ் இந்தியர்கள் அழைத்துவரப்படும் பட்சத்தில், அவர்களுக்கு அங்கேயே கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படும். மேலும் கொரோனா தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்ட பின்னரே அவர்கள் தாயகம் அளித்து வர படுவார்கள் என கூறப்படுகிறது. இந்தியா வந்தவுடன் அவர்களுக்கு மீண்டும் பரிசோதனை நடத்தப்படும் எனவும், மேலும் 2 வாரங்களுக்கு தனிமைப்படுத்தப்படுவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |