Categories
மாநில செய்திகள்

“அரியர்ஸ் தேர்வு” விதிமீறல் இல்லை…. அதிகாரம் உள்ளது…. அரசு விளக்கம்…!!

கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக மத்திய, மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். இதனுடைய பாதிப்பைக் கட்டுப்படுத்த ஊரடங்கு தொடர்ந்து அமலில் இருந்து வந்ததன் காரணமாக, பள்ளி, கல்லூரி மாணவர்களின் தேர்வு செய்யப்பட்டு அனைவரும் தேர்ச்சி என அறிவிக்கப்பட்டது. கல்லூரியில் அரியர்ஸ் வைத்திருந்த மாணவர்களுக்கும் இது பொருந்தும்.

அரியர் தேர்வுகளுக்கு கட்டணம் செலுத்தி இருந்தால், அவர்களும் தேர்ச்சி என்ற அறிவிப்பை தமிழக அரசு அறிவித்தது. இதற்கு தமிழக மாணவர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்தது. இந்நிலையில் கல்லூரி மாணவர்களின் தேர்ச்சி முறை கேடானது என சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்ட நிலையில்,

தமிழகத்தில் அரியர்ஸ் மாணவர்கள் ஆல்பாஸ் செய்யப்பட்டதில், எந்த விதி மீறலும் நடக்கவில்லை என்று தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் விளக்கம் அளித்துள்ளது. மாணவர்களின் நலன் கருதி பல்கலைக்கழகங்களுடன் ஆலோசனை செய்த பிறகே ரத்து செய்யப்பட்டதாகவும், அரியர் தேர்வை ரத்து செய்ய பல்கலைக்கழகத்திற்கு அதிகாரம் உள்ளது என்றும் அரசு தெரிவித்துள்ளது. 

Categories

Tech |