Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

சட்டவிரோத செயல்…. வசமாக சிக்கிய நபர்…. கைது செய்த போலீஸ்….!!

சட்ட விரோதமாக மது விற்பனையில் ஈடுபட்டவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள ஆறுமுகநேரி-அடைக்கலாபுரம் சாலையில் ஆறுமுகநேரி காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அப்பகுதியில் சந்தேகத்திற்கிடமான வகையில் நின்று கொண்டிருந்த ஒருவரை மடிக்கி பிடித்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் அவர் மங்களவாடி பகுதியில் வசிக்கும் சுரேஷ் என்பது தெரியவந்துள்ளது.

மேலும் அவர் சட்ட விரோதமாக மது விற்பனையில் ஈடுபட்டதும் தெரியவந்துள்ளது. இதுகுறித்து வழக்கு பதிவு செய்த ஆறுமுகநேரி காவல்துறையினர் சுரேஷை கைது செய்ததோடு அவரிடமிருந்த 8 மதுபாட்டில்களையும் பறிமுதல் செய்தனர்.

Categories

Tech |