மோட்டார் சைக்கிளில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை கடத்தி சென்றவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள கோவில்பட்டி காவல்துறையினர் மந்திதோப்பு சாலையில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்தவரை காவல்துறையினர் மடக்கிப் பிடித்து சோதனை செய்தனர். அந்த சோதனையில் மோட்டார் சைக்கிளில் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை கடத்தி சென்றது தெரியவந்துள்ளது.
இது குறித்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில் அவர் கணேஷ் நகர் பகுதியில் வசிக்கும் தங்கவேலு என்பது தெரியவந்துள்ளது. மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தங்கவேலுவை கைது செய்ததோடு அவர் வைத்திருந்த ரூ.35 ஆயிரம் மதிப்புள்ள 945 புகையிலை பாக்கெட்டுகள் மற்றும் கடத்தலுக்கு பயன்பட்ட மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்தனர்.