Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

போலீசுக்கு வந்த தகவல்…. அதிரடி நடவடிக்கையில் சிக்கிய பெண்….!!

சட்டவிரோதமாக சாராய விற்பனையில் ஈடுபட்ட பெண்ணை போலீசார் கைது செய்தனர்.

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள தென்னமாதேவி பகுதியில் சரஸ்வதி என்பவர் வசித்து வருகிறார். இவர் சட்டவிரோதமாக சாராயம் விற்பனையில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்நிலையில் தென்னமாதேவி பகுதியில் சாராயம் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் அளிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து தென்னமாதேவி காவல்துறை துணை ஆய்வாளர் சுந்தர்ராஜன் தலைமையிலான காவல்துறையினர் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர். அப்போது அங்கு சாராயம் விற்றுக் கொண்டிருந்த சரஸ்வதியிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். மேலும் அவரிடம் இருந்த 15 லிட்டர் சாராயத்தை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து தென்னமாதேவி காவல்துறையினர் சரஸ்வதி மீது வழக்குப்பதிந்து பின் கைது செய்தனர்.

Categories

Tech |