சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்ட வாலிபரை போலீசார் கைது செய்துள்ளனர்.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள இருக்கன்குடி பகுதியில் பூமிராஜன் என்னும் வாலிபர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் உள்ள மாரியம்மன் கோவில் அருகே ஆற்றுப்பகுதியில் சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்டுள்ளார். இந்நிலையில் இருக்கன்குடி பகுதியில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்யப்படுவதாக இருக்கன்குடி காவல் நிலையத்திற்கு ரகசிய தகவல் அளிக்கப்பட்டது.
அந்த தகவலின் பேரில் இருக்கன்குடி காவல்துறை துணை ஆய்வாளர் சந்தனமாரிமுத்து தலைமையிலான காவல்துறையினர் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு மது விற்றுக்கொண்டிருந்த பூமிராஜனை போலீசார் மடக்கி பிடித்து விசாரணை மேற்கொண்டனர். மேலும் அவரிடமிருந்து ரூ.160 பணத்தையும், 9 மது பாட்டில்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர். இதையடுத்து பூமி ராஜன் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து பின் கைது செய்தனர்.