Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

சட்டைப்பையில தான் சார் வச்சுருந்தேன்…! மளிகை வியாபாரி புகார்… இளம்பெண் கைது..!!

திருச்செந்தூரில் தங்க நகையை திருட முயற்சித்த இளம்பெண்ணை போலீசார் கைது செய்துள்ளனர்.

சென்னை மாவட்டத்தில் உள்ள திருவேற்காடு பகுதியில் பாலமுருகன் என்பவர் வசித்து வருகிறார். இவர் மளிகை வியாபாரம் செய்து வருகிறார். இந்நிலையில் இவர் திருச்செந்தூருக்கு மாசி திருவிழா தேரோட்டம் காண்பதற்காக தனது சித்தி மற்றும் தாயை அழைத்து சென்றுள்ளார். அங்கு எதிர்பாராதவிதமாக அவரது சித்தி கழுத்தில் அணிந்திருந்த தங்கச் சங்கிலி அறுந்துள்ளது.

அறுந்த சங்கிலியை பாலமுருகன் ஒரு காகிதத்தில் மடித்து சட்டை பாக்கெட்டில் வைத்துள்ளார். பின் அவர்கள் சென்னை புறப்படுவதற்காக பேருந்து நிலையத்திற்கு சென்றுள்ளனர். அங்கு பஸ் ஏறும்போது பாலமுருகனின் சட்டை பாக்கெட்டில் இருந்த தங்க சங்கிலியை இளம்பெண் ஒருவர் திருட முயற்சித்துள்ளார். அப்போது அவரை மடக்கிப் பிடித்த பாலமுருகன் இந்த திருட்டு குறித்து திருச்செந்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் காவல்துறையினர் மல்லிகாவின் மீது வழக்குப்பதிந்து பின் கைது செய்தனர்.

Categories

Tech |