Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

திண்டுக்கல்லில் போடப்பட்ட வாகன சோதனை… வசமாக வந்து சிக்கிய வழிப்பறி கொள்ளையன்… வச்சு செய்த காவல்துறை..!!

திண்டுக்கல்லில் காரை திருடிச் சென்ற வழிப்பறி கொள்ளையனை காவல்துறையினர் வாகன சோதனையின் போது கைது செய்துள்ளனர்.

மதுரை மாவட்டத்தில் சீமராஜா என்பவர் வசித்து வருகிறார். இவர் வழிப்பறி, கொலை உள்ளிட்ட பல்வேறு செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளார். இதனால் மதுரை காவல் துறையினர் அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்துள்ளனர். இதையடுத்து சென்ற வாரம் சீமராஜா ஜாமீனில் வெளியே வந்துள்ளார். இந்நிலையில் இவர் சத்திரப்பட்டி பகுதியில் நின்று கொண்டிருந்த கார் ஒன்றை திருடி கொண்டு திண்டுக்கல் நோக்கி சென்று கொண்டிருந்தார்.

அப்போது திண்டுக்கல்லில் ரெட்டியபட்டி நெடுஞ்சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் சீமராஜாவை மடக்கிப்பிடித்தனர். அதன்பின் அவரை விசாரணை நடத்தியதில் அவர் மீது வழிப்பறி கொள்ளை மற்றும் கொலை போன்ற பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து திண்டுக்கல் காவல்துறையினர் மதுரை சத்திரப்பட்டி காவல் துறையினருக்கு இது குறித்து தகவல் அளித்தனர். அந்த தகவலின் பேரில் திண்டுக்கல் வந்தடைந்த மதுரை காவல்துறையினர் சீமராஜாவை கைது செய்து பலத்த பாதுகாப்புடன் அழைத்து சென்றனர்.

Categories

Tech |