நாகப்பட்டினத்தில் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள காடம்பாடி பகுதியில் நெப்போலியன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தெற்கு நல்லியான் தோட்டப் பகுதியில் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு உள்ளார். அப்போது அங்கு ரகசிய தகவலின் பேரில் வெளிப்பாளையம் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர்.
அங்கு நெப்போலியனை கண்ட காவல்துறையினர் அவரை அழைத்து சந்தேகத்தின் பெயரில் விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில் நெப்போலியன் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து 300 கிராம் கஞ்சாவை காவல்துறையினர் அவரிடமிருந்து பறிமுதல் செய்தனர். மேலும் நெப்போலியன் மீது வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அவரை கைது செய்துள்ளனர்.