நாகையில் வீட்டில் தனியாக இருந்த இளம்பெண் தலையில் குக்கரால் தாக்கிய வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள செம்மரக்கட்டை பகுதியில் தாதாஷரிப் என்பவர் வசித்து வருகிறார். இவர் வேலை காரணமாக வெளிநாடு சென்றுள்ளார். இவருக்கு ரிஹானாசமின் என்ற மனைவியும், ஒரு மகளும், 2 மகன்களும் உள்ளனர். இவர் வீட்டிற்கு மேலுள்ள மாடியில் யாசர்அரபத் என்ற வாலிபர் இரண்டு வருடமாக வாடகைக்கு குடியிருந்து வருகிறார்.
இந்நிலையில் வீட்டில் தனியாக இருந்த ரிஹானாசமினிடம் வாலிபர் தவறாக நடக்க முயற்சி செய்துள்ளார். அதை தடுக்க முயன்ற ரிஹானாசமினை வாலிபர் குக்கரை எடுத்து தலையில் மோசமாக தாக்கியுள்ளார். இந்த சம்பவத்தில் படுகாயமடைந்த ரிஹானாசமின் சிகிச்சைக்காக நாகப்பட்டினம் அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து நாகப்பட்டினம் காவல்துறையினர் யாசர்அராபத் மீது வழக்குப்பதிந்து பின் கைது செய்துள்ளனர்.