Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

மார்க்கெட்டுக்கு சென்ற இளம்பெண்… 6 பவுனை அலேக்காக தூக்கிய மர்மநபர்… பல நாளுக்கு பின் கைது..!!

பெரம்பலூரில் பெண்ணிடம் தங்கச்சங்கிலியை பறித்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள மேற்கு அபிராமபுரத்தில் பெரியசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஜெயலட்சுமி என்ற மனைவி உள்ளார். பெரியசாமி வேளாண்துறையில் அதிகாரியாக பணிபுரிந்து ஓய்வு பெற்றுள்ளார்.
சம்பவத்தன்று இவரது மனைவி ஸ்கூட்டரில் மார்க்கெட்டுக்கு சென்று விட்டு வீடு திரும்பி கொண்டிருந்தார். அப்போது அவர் பின்னால் மர்ம நபர் ஒருவர் மோட்டார் சைக்கிளில் வந்துள்ளார். அவர் ஜெயலட்சுமி கழுத்திலிருந்த 6 பவுன் தங்க நகையை பறித்து சென்றுள்ளார்.

இந்த திருட்டு குறித்து ஜெயலெட்சுமி பெரம்பலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்தனர். மேலும் பெரம்பலூர் காவல்துறையினர் தனிப்படை அமைத்து சந்தேகப்படும்படியாக சுற்றுபவர்களை பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது சேலம் மாவட்டம் பள்ளக்காடு கிராமத்தில் வசித்து வரும் சிவபெருமாள் என்பவருடைய மகன் பெரியசாமி என்பவரை சந்தேகத்தின்பேரில் விசாரித்தனர். அப்போது அவர்தான் ஜெயலட்சுமி தாலிசங்கிலியை பறித்து சென்றார் என்பது தெரியவந்தது. இதையடுத்து காவல்துறையினர் பெரியசாமி மீது வழக்குபதிந்து அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Categories

Tech |