சிவகங்கை இளையான்குடி அருகே சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்ட வரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள இளையான்குடியில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்யப்படுவதாக இளையான்குடி காவல் நிலையத்திற்கு ரகசிய தகவல் அளிக்கப்பட்டது. அந்த தகவலின் பேரில் இளையான்குடி பகுதியில் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு அவர் சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்டவரை காவல்துறையினர் மடக்கிப் பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.
அந்த விசாரணையில் அவர் புலியூர் கிராமத்தில் வசித்து வரும் பூமி என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரிடம் இருந்த 10 மதுபாட்டில்களை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். மேலும் சட்டவிரோதமாக மது விற்பனை செய்த குற்றத்திற்காக காவல்துறையினர் பூமி மீது வழக்குப்பதிந்து பின் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.