Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

முற்றிய குடும்பத்தகராறு… மனைவி மீது தீ வைத்த கணவன்… காவல்துறை கைது..!!

நாகை அருகே குடும்ப தகராறில் மனைவி மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்த கணவனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள வேதநாயகம் செட்டித்தெருவில் விஜயபாஸ்கரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு எட்டு வருடங்களுக்கு முன்பு தனவள்ளி என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. இவர்கள் இருவருக்கும் தற்போது ஆண் குழந்தை ஒன்று உள்ளது. மேலும் கணவன்-மனைவி இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் சம்பவத்தன்று கணவன்-மனைவி இருவருக்கும் இடையே தகராறு முற்றியது.

அப்போது ஆத்திரமடைந்த விஜயபாஸ்கரன் அவரது மனைவி மீது மண்ணெண்ணையை ஊற்றி நெருப்பை பற்ற வைத்து அவர் மீது வீசியுள்ளார். இதில் தனவள்ளி பலத்த காயமடைந்தார். தற்போது அவர் நாகப்பட்டினத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து நாகப்பட்டினம் டவுன் காவல்துறையினர் விஜயபாஸ்கர் மீது வழக்குப்பதிந்து பின் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Categories

Tech |