சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் மது பாட்டில்களை காரில் பதுக்கி வைத்து சென்று கொண்டிருந்தவரை காவல்துறையினர் வாகன சோதனையில் கைது செய்துள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள திருக்களம்பூரை சேர்ந்தவர் பிரவீன் குமார் ( 35 ). இவர் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சிங்கம்புணரி சுக்காம்பட்டி சாலையில் காரில் மதுபாட்டில்களை வாங்கி பதுக்கி வைத்து சென்று கொண்டிருந்த போது காவல்துறையினரிடம் வாகன சோதனையில் பிடிபட்டார்.
இதையடுத்து சிங்கம்புணரி காவல்துறையினர் அவருடைய காரில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 911 மது பாட்டில்களையும் பறிமுதல் செய்தனர். அதன்பின் பிரவீன் குமார் மீது வழக்குப்பதிந்த காவல்துறையினர் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.