Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

சோதனையில் சிக்கிய வாகனம்… காவல்துறையினரின் அடுத்தடுத்த கேள்விகள்… விசாரணையில் வெளிவந்த உண்மை..!!

சிவகங்கை மாவட்டம் எஸ்.புதூரில் ஆடுகளை திருடிய 6 பேரை காவல்துறையினர் வாகன சோதனையின்போது கைது செய்துள்ளனர்.

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருமலைக்குடி கிராமத்தில் புழுதிபட்டி காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த சரக்கு வாகனத்தை தடுத்து நிறுத்தி சோதனை மேற்கொண்டனர். அந்த சோதனையில் 5 ஆடுகள் மற்றும் 1 ஆட்டுக்குட்டி ஆகியவற்றை சரக்கு வாகனத்தில் கொண்டு செல்வது தெரியவந்தது. இது குறித்து வாகனத்தில் வந்தவர்களிடம் விசாரித்ததில் அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்துள்ளனர். இதனால் சந்தேகம் அடைந்த காவல்துறையினர் அவர்களிடம் தீவிர விசாரணை செய்ததில் அவர்கள் புதுக்கோட்டை மாவட்டம் பெருமாள்பட்டி கிராமத்தில் வசித்து வரும் பாஸ்கரன் என்பவரது ஆடுகளை திருடியது தெரியவந்தது.

இதையடுத்து காவல்துறையினர் ஆடுகளை திருடியதற்காக திருமலைகொடி கிராமத்தை சேர்ந்த சிவா, அர்ஜுன், உமேஷ், புதுக்கோட்டை மாவட்டம் செப்பினான் தோப்பு கிராமத்தில் வசித்து வரும் ராஜா, சதீஷ்குமார், சேகர் ஆகிய 6 பேர் மீதும் வழக்குப்பதிந்து பின் கைது செய்துள்ளனர். அதோடு ஆடுகளை கடத்துவதற்காக பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிள் மற்றும் சரக்கு வாகனத்தையும் காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

Categories

Tech |