Categories
தேனி மாவட்ட செய்திகள்

வீடு வீடாக சோதனை செய்து தூக்கிய காவல்துறையினர்…. வசமாக சிக்கிய 2 நபர்கள்…. தேனியில் நடந்த சம்பவம்….!!

தேனியில் வீட்டினுள் சுமார் 1,151 மதுபாட்டில்களை விற்பனைக்கு பதுக்கி வைத்தது தொடர்பாக 2 நபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

தேனி மாவட்டம் கடமலைக்குண்டிற்கு அருகிலிருக்கும் குமணன்தொழுவில் சட்டத்திற்கு புறம்பாக மொத்தமாக மது பாட்டிலை வாங்கி, விற்பனை செய்வதற்காக வீட்டினுள் பதுக்கி வைத்திருப்பதாக மயிலாடும்பாறையிலிருக்கும் காவல் துறையினருக்கு ரகசியமாக தகவல் கிடைத்துள்ளது. இத்தகவலின் அடிப்படையில் காவல்துறையினர் குமணன்தொழுவிற்கு சென்று வீடு வீடாக சோதனையை மேற்கொண்டனர்.

அப்போது அதே ஊரில் வசித்து வந்த வெள்ளையன் என்பவர் தன்னுடைய வீட்டில் சுமார் 1,156 மது பாட்டிலை பதுக்கி வைத்திருந்தது கண்டறியப்பட்டது. இதற்கு உடந்தையாக இருந்த வனராஜ் என்பவர் மீதும், வெள்ளையன் மீதும் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்ததோடு மட்டுமல்லாமல் 2 நபர்களையும் கைதும் செய்தனர். மேலும் அவர்கள் வைத்திருந்த மது பாட்டிலையும் பறிமுதல் செய்தனர்.

Categories

Tech |