நெல்லையில் பணத்தைக் கொள்ளையடித்து சென்ற மர்ம நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் ஆறுமுகசெல்வி என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் ஆறுமுகசெல்வி தன்னுடைய பைக்கிலிருக்கும் சீட்டுக்கு அடியில் 10,000 ரூபாயை வைத்திருந்தார். இவ்வாறு அவர் வைத்திருந்த பணத்தினை மர்ம நபர் கொள்ளையடித்து சென்றனர். இதனால் அதிர்ச்சியடைந்த அவர் பாளையங்கோட்டையிலிருக்கும் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அப்புகாரை ஏற்ற காவல்துறையினர் இதுகுறித்து தீவிர விசாரணை மேற்கொண்டதில் கே.டி.சி நகரில் வசித்து வந்த ராமனை கைது செய்துள்ளனர். மேலும் அவர் கொள்ளையடித்து சென்ற பணத்தையும் காவல்துறையினர் மீட்டனர்.