நெல்லையில் சாராயம் காய்ச்சுவதற்காக போடப்பட்டிருந்த ஊறலை காவல்துறையினர் அளித்ததோடு மட்டுமல்லாமல் 3 நபர்களையும் கைது செய்துள்ளனர்.
திருநெல்வேலி மாவட்டம் விக்கிரமசிங்கபுரத்திலிருக்கும் தோட்டத்தினுள் சாராயம் காய்ச்சுவதற்காக ஊறல் போட்டு வைத்திருப்பதாக ஆலங்குளத்திலிருக்கும் மதுவிலக்கு காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இத்தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் சாராயம் காய்ச்ச போடப்பட்டிருந்த ஊறல்களை அழித்தனர். மேலும் இச்சம்பவம் தொடர்பாக மதுவிலக்கு காவல்துறையினர் அப்பகுதியில் வசித்து வரும் மாடசாமி, முருகன், கண்ணன் ஆகியோரை கைதும் செய்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.