நெல்லையில் மதுவினை விற்பனை செய்த 24 நபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
தற்போது உள்ள காலகட்டத்தில் அனைத்து பகுதிகளிலும் சில நபர்கள் சட்டத்திற்குப் புறம்பான குற்ற செயல்களில் ஈடுபடுகின்றனர். இதனை தடுக்க காவல்துறையினர் பல முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் திருநெல்வேலி மாவட்டத்தினுடைய காவல்துறை சூப்பிரண்டான மணிவண்ணன் சட்டத்திற்குப் புறம்பாக மதுபாட்டில்களை விற்பனை செய்யும் நபர்களின் மீது கடுமையான நடவடிக்கையை எடுக்க காவல்துறையினருக்கு உத்தரவிட்டார்.
அதன்படி காவல்துறையினர் திருநெல்வேலி மாவட்டம் முழுவதுமாக சோதனை செய்ததில் சட்டத்திற்குப் புறம்பாக மதுவினை விற்பனை செய்த 24 நபர்களை கைது செய்துள்ளனர். மேலும் அவர்கள் வைத்திருந்த 1,490 மது பாட்டிலையும் பறிமுதல் செய்துள்ளனர்.