Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

சட்டவிரோதமாக செய்த செயல்… ரோந்து பணியில் சிக்கியவர்… காவல்துறையினர் அதிரடி நடவடிக்கை..!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனியில் சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்டவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனியில் கொரோனா ஊரடங்கு அமலில் இருப்பதால் பழனி டவுன் காவல்துறையினர் சட்ட விரோதமான செயல்களை தடுப்பதற்காக ரோந்து பணியில் தீவிரமாக ஈடுபட்டிருந்தனர். அப்போது தாராபுரம் சாலை பகுதியில் ஒருவர் சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்.

அவரை காவல்துறையினர் கையும், களவுமாக பிடித்து விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில் அவர் அடிவாரம் பகுதியில் வசித்து வரும் சிவகுமார் என்பது தெரியவந்தது. இதையடுத்து காவல்துறையினர் அவரை கைது செய்து அவரிடமிருந்த 15 மது பாட்டில்களையும் பறிமுதல் செய்துள்ளனர்.

Categories

Tech |