Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

ரூ10,00,000 கடன்….. ரூ12,500 நிவாரண தொகை கேட்டு போராட்டம்….. 30 பேர் கைது….!!

கடலூர் அருகே நிவாரணத்தொகை கேட்டு போராட்டத்தில் ஈடுபட்ட 30 பேர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு கடந்த மார்ச் 23-ம் தேதி முதல் இன்று வரை 5வது கட்டமாக தொடர்ந்து அமுலிலுள்ளது.  இந்த ஊரடங்கு காலகட்டத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மத்திய அரசு ரூபாய் 7,500 ரொக்கமும்,  மாநில அரசு 5,000 ரூபாய் நிவாரணத் தொகையாகவும்  வழங்க வேண்டும் என்றும், சிறு குறு தொழில் செய்பவர்களுக்கு இத்துடன் ரூபாய் 10 லட்சம் மதிப்பில் கடன் வழங்கி உதவ வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட போவதாக கம்யூனிஸ்ட் கட்சிகளின் சார்பில் அறிவிக்கப்பட்டது.

அதன்படி, காவல்நிலையத்தில் அனுமதி மனு அளிக்கப்பட   ஊரடங்கு அமலில் இருப்பதால், அவர்களது அனுமதி மனு மறுக்கப்பட்டது. காவல்துறையினரின் எதிர்ப்பையும் மீறி மஞ்சக்குப்பம் கார் நிறுத்தம் அருகில் கட்சி உறுப்பினர்களை திரட்டி ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நகர செயலாளர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நகர செயலாளர் உட்பட ஏராளமான கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இது குறித்து காவல்நிலையத்தில் தகவல் தெரிவிக்கப்பட, சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள்  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 19 நபர்களை கைது செய்தனர். அதேபோல், அண்ணா பாலம் அருகே மற்றொரு கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த நபர்கள் போராட்டத்தில் ஈடுபடுவதாக வந்த தகவலையடுத்து, அங்கு விரைந்த அதிகாரிகள்  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 11 பேர் என மொத்தம் 30 பேரை கைது செய்தனர்.

Categories

Tech |