Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

பொதுமக்களை அச்சுறுத்தி வந்த வாலிபர்…. கலெக்டரின் அதிரடி உத்தரவு…. நெல்லையில் நடந்த சம்பவம்….!!

நெல்லையில் வாலிபரை காவல்துறையினர் குண்டாசில் கைது செய்துள்ளனர்.

திருநெல்வேலி மாவட்டம் ராஜபுரத்தில் அருண்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் பொதுமக்களை அச்சுறுத்தல், வழிப்பறி, அடிதடி போன்ற செயல்களில் ஈடுபட்டதால் காவல்துறையினர் அருண் குமாரின் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்ததோடு மட்டுமல்லாமல் கடலூரிலிருக்கும் மத்திய சிறையிலும் அடைத்துள்ளனர்.

இந்நிலையில் நெல்லை மாவட்டத்தினுடைய காவல்துறை சூப்பிரண்டான மணிவண்ணன் அருண்குமாரை குண்டாசில் கைது செய்ய மாவட்டத்தினுடைய கலெக்டரான விஷ்ணுவுக்கு பரிந்துரை செய்தார். அப்பரிந்துரையை ஏற்ற கலெக்டர் அவரை குண்டாஸில் கைது செய்ய உத்தரவு பிறப்பித்தார். அதன்படி காவல்துறையினர் மத்திய சிறையினுடைய அதிகாரியிடம் குண்டாசில் கைது செய்யப்பட்டதற்கான ஆணையை சமர்ப்பித்தனர்.

Categories

Tech |