திருநெல்வேலியில் ஊரடங்கு விதியை மீறி வெளியே சுற்றித் திரிந்த 2 வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளையிலிருக்கும் காவல்துறையினர் பஜார் பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு ஊரடங்கு விதியை மீறி தேவையின்றி பைக்கில் சுற்றித்திரிந்த அதே பகுதியில் வசித்து வரும் சிவபிரதீப் என்பவரையும், காமராஜ் நகரில் வசித்து வரும் முத்துக்குமார் என்பவரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் அவர்கள் வைத்திருந்த மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்தனர்.