Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

பள்ளி மாணவியை கடத்தி சென்ற வாலிபர்…. காவல்துறையினர் அதிரடி நடவடிக்கை…. நெல்லையில் பரபரப்பு….!!

நெல்லையில் டிரைவரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.

திருநெல்வேலி மாவட்டம் தருவையில் டிரைவரான முரளி என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் முரளி 10 ஆம் வகுப்பு பயிலும் மாணவியை ஆசை வார்த்தைகளை கூறி கடத்தி சென்றுள்ளார். அதன்பின் 10 ஆம் வகுப்பு பயிலும் மாணவி தன்னுடைய வீட்டிற்கு திரும்பி வந்துவிட்டார். இச்சம்பவம் குறித்து முன்னீர்பள்ளம் காவல் நிலையத்தில் மாணவியின் பெற்றோர்கள் புகார் கொடுத்தனர். அப்புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் முரளியை போக்சோ சட்டத்தில் அடிப்படையில் கைது செய்தனர்.

Categories

Tech |