நெல்லையில் மாணவியை கடத்தி சென்ற கொத்தனாரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளையில் 12 ஆம் வகுப்பு பயின்று வரும் மாணவி வசித்து வருகிறார். இந்நிலையில் மாணவியினுடைய தந்தை புதிதாக வீட்டை கட்டுகிறார். அந்த வீட்டிற்கு புஷ்பராஜ் என்ற வாலிபர் கொத்தனார் வேலை செய்வதற்கு வந்துள்ளார். இந்நிலையில் திடீரென்று மாணவியை காணவில்லை.
இதுகுறித்து மாணவியினுடைய தாய் திசையன்விளை காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அப்புகாரில் கொத்தனார் பணிபுரிய வந்த புஷ்பராஜ் தன்னுடைய மகளை ஆசை வார்த்தைகளை கூறி கடத்தி சென்றதாக தெரிவித்துள்ளார். அப்புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் புஷ்பராஜ்ஜை போக்சோ சட்டத்தின் அடிப்படையில் கைது செய்தனர்.