Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

போலீசுக்கு வந்த தகவல்… வசமாக சிக்கிய வாலிபர்… அதிரடி நடவடிக்கையால் கைது..!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சாக்கோட்டை அருகே சட்டவிரோதமாக மணல் கடத்தலில் ஈடுபட்ட வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள பானாவயல்-பிரம்புவயல் கிராமங்களுக்கு இடையே சறுக்கு பாலம் அருகே சரக்கு வாகனம் ஒன்றில் சிலர் சட்டவிரோதமாக ஆற்று மணலை கடத்தியுள்ளனர். அப்போது திடீரென பின்பக்க சக்கரம் வேனிலிருந்து கழன்று தனியாக ஓடியுள்ளது. இதனால் மணல் கடத்தலில் ஈடுபட்டவர்கள் அதனை அப்படியே போட்டு விட்டு அங்கிருந்து தப்பி ஓடியுள்ளனர். இதுகுறித்து தகவலறிந்த சாக்கோட்டை காவல்துறையினர் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டனர்.

அதனை தொடர்ந்து மணல் கடத்தலில் தொடர்புடைய அண்ணாநகர் பகுதியை சேர்ந்த பிரகாஷ் ( 30 ) என்பவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் மணல் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட வேனையும் பறிமுதல் செய்துள்ளனர். அதனைத் தொடர்ந்து மணல் கடத்தலில் சம்பந்தப்பட்ட சில நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.

Categories

Tech |