நெல்லையில் கஞ்சா வைத்திருந்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூரில் காவல்துறை சப்-இன்ஸ்பெக்டரான அருண் ராஜா தலைமையிலான காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது தெற்கு மெயின் சாலையில் வாலிபர் சந்தேகத்திற்கிடமாக பையுடன் நின்று கொண்டிருந்தார். இந்நிலையில் காவல்துறையினர் வாலிபர் வைத்திருந்த பையை சோதனை செய்ததில், அதற்குள் கஞ்சா இருந்தது கண்டறியப்பட்டது.
இதனையடுத்து காவல்துறையினர் அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டதில் அந்த வாலிபர் ஊற்றடியில் வசித்துவந்த முருகன் என்பதும், கஞ்சாவை விற்பனை செய்வதற்காக வைத்திருந்ததும் தெரியவந்தது. இதனையடுத்து காவல்துறையினர் முருகனை கைது செய்ததோடு மட்டுமல்லாமல் அவர் வைத்திருந்த 100 கிராம் அளவிலான கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர்.