Categories
தேனி மாவட்ட செய்திகள்

சந்தேகத்திற்கிடமாக நின்று கொண்டிருந்த வாலிபர்கள்… மாவட்ட சூப்பிரண்டுக்கு கிடைத்த ரகசிய தகவல்…. காவல்துறையினர் அதிரடி நடவடிக்கை….!!

தேனியில் சாராயம் விற்பனை செய்த 2 நபர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.

தேனி மாவட்டம் சின்னமனூருக்கு அருகே சாராயம் காய்ச்சி விற்பதாக தனிப்பிரிவு காவல்துறையினருக்கு ரகசியமாக தகவல் கிடைத்தது. இந்நிலையில் மாவட்டத்தினுடைய காவல்துறை சூப்பிரண்டான சாய்சரண் தேஜஸ்வி ஆணையின்படி உத்தமபாளையம் காவல்துறை இன்ஸ்பெக்டர் தலைமையிலான காவல்துறையினர் அப்பகுதியில் தீவிரமாக ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது அங்கு சந்தேகத்திற்கிடமாக நின்று கொண்டிருந்த 2 நபர்களை விசாரணை செய்தனர். அவ்விசாரணையில் அவர்கள் 2 பேரும் அதே பகுதியை சேர்ந்தவர் என்பதும், சாராயம் காய்ச்சி அங்கு விற்பனை செய்ததும் கண்டறியப்பட்டது. இதனையடுத்து காவல்துறையினர் 2 நபர்களையும் கைது செய்ததோடு மட்டுமல்லாமல் சாராயம் காய்ச்சி நிரப்பப்பட்டு வைத்திருந்த பிளாஸ்டிக் பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

Categories

Tech |