Categories
உலக செய்திகள்

பெண் போல் நடித்த ஆண்…. போட்டுக் கொடுத்த விமான ஊழியர்…. விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் உண்மை….!!

பெண் போல பர்தாவை அணிந்து கொண்டு விமானத்தில் பயணம் செய்த கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபரை விமான நிலைய அதிகாரிகள் கைது செய்துள்ளார்கள்.

இந்தோனேசியாவில் விமானத்தில் பயணம் செய்த ஆண் ஒருவர் பாத்ரூமிற்கு சென்றுள்ளார். ஆனால் அவர் வெளியே வரும்போது பெண் போன்று பர்தாவை அணிந்து கொண்டு வந்துள்ளார். இவருடைய இந்த செயலை விமானத்தில் பணிபுரியும் பெண் ஊழியர் ஒருவர் பார்த்துக் கொண்டே இருந்துள்ளார்.

இதனையடுத்து அந்தப் பெண் ஊழியர் இதுதொடர்பான தகவலை விமான நிலையம் அதிகாரிகளுக்கு கொடுத்துள்ளார். இதனைத் தொடர்ந்து விமானம் தரையிறங்கிய பிறகு கீழே இறங்கிய அந்த நபரை விமான நிலைய அதிகாரிகள் மடக்கிப் பிடித்து கைது செய்துள்ளார்கள்.

அதன்பின் அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொண்டதில் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையே அவர் விமானத்தில் பயணம் செய்ய தன்னுடைய மனைவியின் பாஸ்போர்ட்டில் பெயரை மாற்றியதும், அதனால் அவர் பெண் போன்று பர்தா அணிந்து கொண்டு வந்ததும் தெரியவந்துள்ளது.

Categories

Tech |