கனடாவில் அளவுக்கு அதிகமான மதுவை அருந்திவிட்டு நெடுஞ்சாலையில் தாறுமாறாக சென்ற கார் ஓட்டுநரை காவல்துறை அதிகாரிகள் கைது செய்துள்ளார்கள்.
கனடா நாட்டில் Longueuil என்னும் நகரம் அமைந்துள்ளது. இந்த நகரத்திலுள்ள நெடுஞ்சாலையில் கார் ஒன்று அதிக வேகத்துடன் கட்டுப்பாடின்றி சென்றுள்ளது. மேலும் அந்தக் கார் திடீரென நெடுஞ்சாலையின் குறுக்கே நின்றுள்ளது. இதனால் பதற்றமடைந்த மற்ற வாகன ஓட்டிகள் இதுகுறித்து காவல்துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்துள்ளார்கள்.
அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறை அதிகாரிகள் அந்தக் காரை சோதனை செய்துள்ளார்கள். அப்போது மிக வேகமாக காரை ஓட்டிக் கொண்டு வந்த 31 வயதுடைய ஓட்டுனர் அயர்ந்து உறங்கிக் கொண்டிருந்துள்ளார்.
இதனையடுத்து காவல்துறை அதிகாரிகள் ஓட்டுநரை கைது செய்து பரிசோதனை செய்ததில் அவர் மிகவும் அளவுக்கு அதிகமாக மதுவை அருந்தி விட்டு வாகனத்தை ஓட்டியது தெரியவந்துள்ளது. இதனைத் தொடர்ந்து காவல்துறை அதிகாரிகள் அவருடைய வாகனத்தை பறிமுதல் செய்ததோடு மட்டுமின்றி ஓட்டுநரது உரிமத்தையும் 90 நாட்களுக்கு ரத்து செய்துள்ளார்கள்.