Categories
உலக செய்திகள்

ஆப்கானிஸ்தான் அதிபரை கைது செய்யுங்கள்…. கோடி கோடியாக கொள்ளையடித்துச் சென்ற அஷ்ரப் கனி…. கடுமையாக குற்றம் சாட்டிய தூதர்….!!

ஆப்கானிஸ்தான் நாட்டை தலிபான்கள் கைப்பற்றியதையடுத்து அந்நாட்டின் அதிபர் அரசுக்கு சொந்தமான சுமார் 1255 கோடி ரூபாயை திருடிவிட்டு ஐக்கிய அரபு அமீரகத்திற்கு தப்பிச் சென்றுள்ளார் என்று தஜிகிஸ்தான் நாட்டிற்கான ஆப்கான் தூதர் தெரிவித்துள்ளார்.

ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்க படைகள் வெளியேற தொடங்கியதையடுத்து அந்நாட்டின் பல பகுதிகளை தலிபான்கள் கைப்பற்றியதோடு மட்டுமின்றி தலைநகர் காபூலையும் தங்கள் வசப்படுத்தியுள்ளார்கள். இதனால் ஆப்கானிஸ்தான் நாட்டின் அதிபர் மூட்டை மூட்டையாக பணத்தை எடுத்து விட்டு குடும்பத்தோடு ஐக்கிய அரபு அமீரகத்திற்கு தப்பி சென்றுள்ளார்.

இந்நிலையில் தஜிகிஸ்தான் நாட்டிற்கான ஆப்கானிஸ்தான் தூதர் முக்கிய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதாவது ஐக்கிய அரபு அமீரகத்திற்கு தப்பி சென்ற ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரப் கனி சுமார் 1255 கோடி ரூபாயை அரசு பணத்திலிருந்து கொள்ளையடித்து சென்றுள்ளார் என்று கூறியுள்ளார். மேலும் ஆப்கானிஸ்தானை விட்டு தப்பிச் சென்ற அதிபரை சர்வதேச அளவிலான காவல்துறை அதிகாரிகள் அதிரடியாக கைது செய்ய வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

Categories

Tech |