Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

மகளை காப்பாற்ற வேற வழி தெரியல….. அம்மி கல்லை தலையில் போட்டு…. கணவன் கொலை….. மனைவி கைது…..!!

நெல்லை அருகே மகளை காப்பாற்றுவதற்காக கணவனை மனைவி கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருநெல்வேலி மாவட்டம் சுப்பிரமணியபுரம் பகுதியில் வசித்து வந்தவர் குமார். இவரது மனைவி இசக்கியம்மாள். இவர்கள் இருவருக்கும் அபிநயா, அனிதா என்ற இரண்டு மகள்களும், சக்திவேல் என்னும் மகனும் உள்ளனர். குமார் மது பழக்கத்திற்கு அடிமையானவர் நாள்தோறும் குடித்துவிட்டு தனது வீட்டாருடன் வாக்குவாதம் செய்வதை தொடர்ந்து வேலையாக வைத்துள்ளார்.

இதனால் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் வழக்கம்போல் நேற்றுமுன்தினம் மதியம் நன்கு குடித்துவிட்டு மனைவியுடன் தகராறில் ஈடுபட்டுள்ளார். ஊரடங்கு காலத்தில் குடித்துவிட்டு பணத்தை வீணடிக்கிறாயே  சாப்பாட்டிற்கு என்ன செய்வது என மனைவி கேள்வி கேட்க வாக்குவாதம் முற்றி ஆத்திரம் அடைந்த குமார் கத்தியை எடுத்து மூத்த மகளை குத்தி விடுவேன் என மிரட்டியுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த இசக்கியம்மாள் மகளை காப்பாற்றுவதற்காக குமாரின் தலையில் அம்மி கல்லை போட்டு தாக்கியுள்ளார். இதில் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே தலை நசுங்கிய நிலையில், அவரது வீட்டிலேயே குமார் பரிதாபமாக உயிரிழந்தார். சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர் குமார் இறந்து கிடப்பதை பார்த்து காவல்நிலையத்தில் தகவல் தெரிவித்தனர்.

பின் சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள், அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துவிட்டு கொலை செய்த மனைவியை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தன் மகளை காப்பாற்றுவதற்காக கணவனை மனைவி கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Categories

Tech |