இருசக்கர வாகனத்தை திருட முயன்ற 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள செருதூர் பகுதியில் சத்தியசீலன் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஆட்டோ ஓட்டி வருகிறார். இந்நிலையில் சத்தியசீலன் தனது இருசக்கர வாகனத்தை வேளாங்கண்ணி தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி அருகில் நிறுத்திவிட்டு வெளியூர் சென்றுள்ளார். இந்நிலையில் 3 பேர் கொண்ட மர்ம கும்பல் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தின் ‘சைடு லாக்கை’உடைத்து திருடிச்செல்ல முயன்றுள்ளனர். இதனையடுத்து அருகில் கிடந்த மற்றொரு இருசக்கர வாகனத்தின் ‘சைடு லாக்கை’ உடைக்கும் போது சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து அவர்களை துரத்தினர்.
ஆனால் 3 பேரும் இருசக்கர வாகனத்தை அங்கு விட்டு தப்பி சென்றுள்ளனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த வேளாங்கண்ணி காவல்துறையினர் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் இருசக்கர வாகனத்தை திருடியது அதிராம்பட்டினம் பகுதியில் வசிக்கும் ஹரிஹரன், பட்டுக்கோட்டையில் வசிக்கும் முகமது ரபிக், முத்துப்பேட்டை பகுதியில் வசிக்கும் பர்வீஸ் அகமது ஆகிய 3 பேரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.