முதியவரை கம்பியால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள சிலுவைப்பட்டி பகுதியில் அந்தோணிசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மைக்கேல்ராஜ் என்ற மகன் உள்ளார். இவருக்கும் அவரது மருமகன் சிலுவைப்பட்டி பகுதியில் வசிக்கும் நெல்சன் ஜான்ராஜாசிங் என்பவருக்கும் இடையே குடும்ப பிரச்சினை இருந்து வந்துள்ளது. இந்நிலையில் மைக்கேல்ராஜ் அவரது வீட்டின் முன்பு நின்று கொண்டிருந்தார்.
அப்பாது அங்கு வந்த நெல்சன் ஜான் ராஜாசிங் மைக்கேல்ராஜிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். மேலும் நெல்சன் ஜான் இரும்பு கம்பியால் தாக்கி கொலைமிரட்டல் விடுத்துள்ளார். மேலும் இது குறித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த தாளமுத்துநகர் காவல்துறையினர் நெல்சன் ஜான் ராஜாசிங்கை கைது செய்துள்ளனர்.