சூதாட்டத்தில் ஈடுபட்ட 8 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
திருப்பூர் மாவட்டத்திலுள்ள பாண்டியன்நகர் பகுதியில் திருமுருகன்பூண்டி காவல்துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டிருந்த கும்பல் காவல்துறையினரை கண்டதும் தப்பி ஓட முயன்றனர். ஆனால் காவல்துறையினர் அனைவரையும் மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர்.
அந்த விசாரணையில் அவர்கள் அதே பகுதியில் வசிக்கும் முத்து மாயர் உள்பட 8 பேர் என்பது காவல்துறையினருக்கு தெரிய வந்துள்ளது. மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் 8 பேரையும் கைது செய்ததோடு அவர்களிடமிருந்த ரூ.3,800-ஐ பறிமுதல் செய்தனர்.