Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

லாட்டரி சீட்டுகள் விற்பனை…. வசமாக சிக்கிய 3 பேர்…. போலீஸ் அதிரடி நடவடிக்கை….!!

கேரள மாநில லாட்டரி சீட்டுகளை விற்ற 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள சாயர்புரம் பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்டுள்ள கேரள மாநில லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்யப்படுவதாக சாயர்புரம் காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

அப்போது தென்காசி மாவட்டத்திலுள்ள சாம்பார் வடகரை பகுதியில் வசிக்கும் கிருஷ்ணன், தூத்துக்குடி மங்கலாபுரம் பகுதியில் வசிக்கும் இசக்கிராஜா, ரகு ஆகியோர் லாட்டரி சீட்டு விற்பனை செய்து கொண்டிருந்தது காவல்துறையினருக்கு தெரிய வந்துள்ளது. இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் 3 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Categories

Tech |