தொழிலாளிக்கு கொலை மிரட்டல் விடுத்த 2 வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள முத்தையாபுரம் பகுதியில் நித்தியானந்தம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சதீஷ்குமார் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் சதீஷ்குமார் முத்தையாபுரம் பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது கிருஷ்ணாநகர் பகுதியில் வசிக்கும் பாலகிருஷ்ணன், பூவிழிராஜா, விமல் ஆகியோர் மது குடிப்பதற்கு சதீஷ்குமாரிடம் பணம் கேட்டுள்ளனர்.
அதற்கு சதீஷ்குமார் தன்னிடம் பணம் இல்லை என்று கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த 3 பேரும் சதீஷ்குமாருக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதுகுறித்து சதீஷ்குமார் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் பாலகிருஷ்ணன், பூவிழிராஜா ஆகிய 2 பேரையும் கைது செய்துள்ளனர். மேலும் தலைமறைவாக உள்ள விமல் என்பவரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.