இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த சித்த மருத்துவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள விளாத்திகுளம் பகுதியில் பத்மநாபன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சித்த மருத்துவரான ராபின்சன் என்ற மகன் உள்ளார். இவர் விளாத்திகுளத்தில் தனியார் ஆஸ்பத்திரி நடத்தி வருகிறார். இந்நிலையில் விளாத்திகுளம் அருகிலுள்ள கிராமத்தில் வசிக்கும் இளம்பெண் ஒருவர் அவருடைய ஆண் குழந்தைக்கு உடல்நலம் சரியில்லாததால் தனியார் மருத்துவமனைக்கு அழைத்து வந்துள்ளார். அப்போது மருத்துவர் ராபின்சன் குழந்தைக்கு சிகிச்சை அளிப்பது போன்று நடித்து இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த இளம்பெண் சத்தம் போட்டுள்ளார்.
அதற்கு மருத்துவர் ராபின்சம் நடந்ததை வெளியில் கூறினால் ஊசி போட்டு கொலை செய்து விடுவேன் என மிரட்டல் விடுத்துள்ளார். இது குறித்து இளம்பெண் விளாத்திகுளம் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் இந்திய தண்டனை சட்டம் 354 (ஏ), 506 (2) உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் ராபின்சனை கைது செய்து விளாத்திக்குளம் சிறையில் அடைத்தனர். மேலும் கடந்த 2015-ஆம் ஆண்டு சித்த மருத்துவம் படித்து விட்டு நோயாளிகளுக்கு ஊசி போட்டு சிகிச்சை அளித்ததாக ராபின்சனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இதனை தொடர்ந்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.