Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

இருவருக்கிடையே ஏற்பட்ட இடப்பிரச்சினை…. செல்போன் கோபுரத்தில் ஏறிநின்று மிரட்டல்…. போலீஸ் விசாரணை….!!

செல்போன் கோபுரத்தில் ஏறி மிரட்டல் விடுத்த வாலிபரை தீயணைப்பு துறையினர் பத்திரமாக மீட்டனர்.

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள லெவிஞ்சிபுரத்தில் சுந்தர் என்பவர் வசித்து வருகிறார். இவர் தச்சு வேலை செய்து வருகிறார். இந்நிலையில் சுந்தர் தூத்துக்குடி ராஜகோபால் நகர் பகுதியில் இடம் வாங்கி அதில் ரூ.10 லட்சம் மதிப்பில் வீடு கட்டியுள்ளார். தற்போது சுந்தருக்கும் அந்த நிலத்தின் உரிமையாளருக்கும் இடம் வாங்கியது தொடர்பாக பிரச்சினை ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் இடத்தின் உரிமையாளர் வீட்டுக்கு இடையூறு செய்து வந்துள்ளார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு சுந்தர் இது குறித்து போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணனிடம் புகார் அளித்துள்ளார்.

ஆனால் அந்த புகார் குறிந்து தற்போது வரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாததால் ஆத்திரமடைந்த சுந்தர் தூத்துக்குடி-பாளையங்கோட்டை ரோட்டில் ஆசிரியர் காலனி சந்திப்பு பகுதியில் உள்ள ஒரு செல்போன் கோபுரத்தில் ஏறி தற்கொலை செய்யப் போவதாக மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த தூத்துக்குடி தென்பாகம் காவல்துறையினர் மற்றும் தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சுந்தரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதன்பின் சுந்தர் செல்போன் கோபுரத்தில் இருந்து கீழே இறங்கி வந்துள்ளார். இது குறித்து வழக்கு பதிவு செய்த தென்பாகம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |