Categories
சென்னை மாநில செய்திகள்

“30 பேர் கைது” இந்த கால் வந்தால்…. போலீசுக்கு போன் பண்ணுங்க….. போலீஸ் எச்சரிக்கை….!!

சென்னை அருகே பண மோசடியில் ஈடுபட்ட இரண்டு இளைஞர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். 

சென்னையில் கொரோனா பாதிப்பைச் தடுப்பதற்காக ஊரடங்கு விதிக்கப் பட்டிருப்பதால், பொதுமக்கள் ஏராளமானோர் பணப்பற்றாக்குறையை சந்தித்து வருகின்றனர். இவர்களது இந்த நிலையை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ளும் வகையில், பொறியியல் பட்டப்படிப்பு முடித்த நடராஜன், மணி  ஆகிய இரண்டு இளைஞர்கள் குறைந்த வட்டியில் லோன் தருவதாகவும் அதை தாமதமாக செலுத்தினாலும் பரவாயில்லை என்றும்  ஆசை வார்த்தை கூறி அவர்களிடம் இருந்து ஆவணங்களை பெற்று வங்கி OTP எண்ணையும் பெற்று லட்சக்கணக்கில் மோசடி செய்துள்ளனர்.

இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்படவே  இருவரையும் கைது செய்த அதிகாரிகள் அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இதே போன்று மோசடியில் ஈடுபட்ட 30 நபர்களை இதுவரை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இந்நிலையில் வங்கியில் இருந்து போன் செய்வதாக கூறி அழைப்பு ஏதும் வந்தால், உடனடியாக காவல் நிலையத்தில் தகவல் தெரிவிக்குமாறு பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |