3 வயது குழந்தையிடன் சில்மிஷத்தில் ஈடுபட்ட தையல் தொழிலாளியை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.
திருப்பூர் மாவட்டத்தில் 3 வயது பெண் குழந்தை ஒன்று வீட்டிற்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக சென்ற நபர் ஒருவர் குழந்தையுடன் நைசாக பேசி சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார். இதனை பார்த்த குழந்தையின் தாய் கூச்சல் போட்டுள்ளார். அந்த சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து அந்த நபரை பிடித்து திருப்பூர் கொங்குநகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
இதுகுறித்து காவல்துறையினர் அந்த நபரிடம் நடத்திய விசாரணையில் அவர் அதே பகுதியில் வசிக்கும் சகுபர் சாதிக் என்பதும் மேலும் அவர் பனியன் நிறுவனத்தில் தையல் தொழிலாளியாக வேலை பார்த்து வந்ததும் தெரியவந்துள்ளது. மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் சகுபர் சாதிக்கை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.