தொழிலாளியை வழிமறித்து பணம் கேட்டு தகராறு செய்தவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அக்சார் பெயிண்ட் ரவுண்டானா அருகில் சந்தேகத்திற்கிடமான வகையில் ஒருவர் நின்று கொண்டிருந்தார். இதனை பார்த்த காவல்துறையினர் அவரை மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர்.
அந்த விசாரணையில் அவர் தூத்துக்குடி போல்பேட்டை பகுதியில் வசிக்கும் சுந்தர் சிவன் என்பதும் மேலும் அவர் அப்பகுதியில் வந்து கொண்டிருந்த தொழிலாளி ஒருவரை வழிமறித்து பணம் கேட்டு கத்தியை காட்டி கொலை மிரட்டல் விடுத்ததும் தெரியவந்துள்ளது. மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் சுந்தர்சிவனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.