Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

கிடைத்த ரகசிய தகவல்…. வசமாக சிக்கிய கடை உரிமையாளர்…. கைது செய்த போலீஸ்….!!

புகையிலைப் பொருட்களை விற்பனை செய்த கடை உரிமையாளரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள ஆறுமுகநேரியில் சட்டவிரோதமாக புகையிலைப் பொருட்களை விற்பனை செய்வதாக காவல்துறையினருக்கு தகவல் ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது முத்தாரம்மன் கோவிலுக்கு எதிரே உள்ள பெட்டிக் கடையில் சட்டவிரோதமாக புகையிலை பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்தது தெரிய வந்துள்ளது.

இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் கடை உரிமையாளரான ஆறுமுகநேரி பகுதியில் வசிக்கும் பாலாஜி என்பவரை கைது செய்துள்ளனர். மேலும் கடையிலிருந்த 228 புகையிலை பாக்கெட்டுகள் பறிமுதல் செய்தனர்.

Categories

Tech |