Categories
தேசிய செய்திகள்

கெஜ்ரிவால் கைது ? ஆயிரக்கணக்கில் கூடியவர்களால் பரபரப்பு ….!!

டெல்லியில் உத்தரபிரதேச தொழிலாளர்கள் பலரும் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

வருகின்ற ஏப்ரல் 14ஆம் தேதி வரை நாடு முழுவதும் முழு ஊரடங்கு உத்தரவு அமுலில் இருப்பதால் வெளிமாநில தொழிலாளர்கள் பலரும் அவரவர் மாநிலம் செல்ல  முடியாமல் சிக்கி தவித்து வருகின்றனர். சம்மந்தப்பட்ட மாநில அரசாங்கம் அவர்களுக்கு தங்க இடம் கொடுத்து, உணவளித்து கவனித்துக் கொள்கிறது.

தலைநகர் டெல்லியில் உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த லட்சக்கணக்கான தொழிலாளர்கள் தங்களது ஊருக்கு செல்ல முடியாமல், பேருந்து இன்றி, உணவின்றி சாலைகளில் தங்கி நடைபயணமாக செல்லும் அவலநிலை ஏற்பட்டது. டெல்லி மாநில துணை முதல்வர் மனிஷ் சிசோடியா, எல்லாருக்கும் முகாம் அமைக்கப்பட்டுள்ளது. அதில் தங்கி கொள்ளலாம் என்று வலியுறுத்தியும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் தங்களுடைய ஊருக்கு சென்று கொண்டே இருந்தனர்.

https://twitter.com/Rajivgupta1515/status/1243987892222844928

இந்த எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வந்த நிலையில் உத்திரப்பிரதேச சார்பில் டெல்லியில் இருந்து ஆயிரம் சிறப்பு பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டு அனைத்து தொழிலாளர்களும் உத்தரப் பிரதேச மாநிலத்திற்கு அழைத்து வரப்படுவார்கள் என்று முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்தார் .இதனையடுத்து தொழிலாளர்கள் அனைவரும் தங்களின் சொந்த மாநிலத்துக்கு திரும்ப டெல்லி ஆனந்த் விஹார் பேருந்து நிலையத்தில் குவிந்தனர்.

இதனிடையே சமூக பரவல் குறித்த அச்சமோ , விழிப்புணர்வோ இன்றி, லட்சக்கணக்கானோர் கூட்டமாக ஊருக்கு செல்வதால் கொரோனா வைரஸ் சமூக தொற்று என்ற 3ஆம் நிலை அபாயத்தை இந்தியா நெருங்குவதாக அச்சம் ஏற்பட்டதுள்ளது. இதனால் பலரும் தங்களின் ஆதங்கத்தை தெரிவித்து வருகின்றனர். ஒரு கட்டத்துக்கு மேல் சென்ற நெட்டிசன்கள் #ArrestKejriwal  என்ற ஹேஷ்டகை இந்தியளவில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர். இது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

https://twitter.com/model_hun/status/1243980015924121602

Categories

Tech |